விமானப்படையின் ஆளில்லா விமானக் கட்டமைப்புக்கு ரூ.4,261 மில்லியன் ஒதுக்கீடு!

#SriLanka #Parliament #LANKA4 #Air Force #vehicle
Abi
1 hour ago
விமானப்படையின் ஆளில்லா விமானக் கட்டமைப்புக்கு ரூ.4,261 மில்லியன் ஒதுக்கீடு!

2026ஆம் ஆண்டுக்கான 8ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு இன்று (05) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று (04) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படையில் ஆளில்லா விமானக் கட்டமைப்பொன்றை நிறுவுவதற்காக 4,261 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்யும் நோக்கில் இந்தக் குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மாறிவரும் செயற்பாட்டுச் சூழல் மற்றும் வங்காள விரிகுடா உள்ளிட்ட அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்படக்கூடிய உடனடி அச்சுறுத்தல்களைக் கருத்திற்கொண்டு இந்த நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!