மரண அறிவித்தல் - அமரர் மயில்வாகனம் ஜெயகாந்தன்

#SriLanka #Jaffna #Death #LANKA4 #funeral #ANUTHAPAM #L4
Prasu
1 hour ago
மரண அறிவித்தல் - அமரர் மயில்வாகனம் ஜெயகாந்தன்

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் திட்டமிடல் பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றி வந்த மயில்வாகனம் ஜெயகாந்தன் அவர்கள், மாரடைப்பு காரணமாக எம்மைவிட்டுப் பிரிந்தார் என்ற துயரச் செய்தி, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் ஒட்டுமொத்த உத்தியோகத்தர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமரர் ஜெயகாந்தன் அவர்களின் எளிமையான அணுகுமுறை, அன்பான உரையாடல், உதவும் மனப்பான்மை ஆகியவை அவருடன் பணியாற்றிய ஒவ்வொருவரின் நினைவிலும் என்றும் நிலைத்திருக்கும்.

குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டப் புள்ளிவிபரக் கைநூலைத் தயாரிக்கும் பணியில் அவர் காட்டிய அர்ப்பணிப்பும் ஈடுபாடும் தனித்துவமானவை.

அப்பணியின் நேர்த்தியான உருவாக்கத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் நினைவுகூரத்தக்கதாகும். அவர் ஆற்றிய பணிகள் அவரது உழைப்புக்கும் தொழில்முறைத் திறமைக்கும் சான்றாக நிலைத்திருக்கும்.

அவரது திடீர் மறைவு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமன்றி, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கும் அவருடன் இணைந்து பணியாற்றிய சக உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

அன்புக்குரிய ஒருவரை இழந்து மீளாத் துயரில் தவிக்கும் அன்னாரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாவட்டச் செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்கள் சார்பிலும் எமது ஆழ்ந்த இரங்கலையும் இதயபூர்வமான அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!