யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை - மகள் மற்றும் மருமகன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு

#Jaffna #ARREST #Murder #LANKA4 #HighCourt #lecturer #L4
Prasu
3 hours ago
யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை - மகள் மற்றும் மருமகன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு

யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் வைத்தியர் தயாளினி திலீபன் கொலை வழக்கில் புதிய நீதிமன்ற நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

54 வயதான விரிவுரையாளர் தயாளினி கடந்த மார்ச் 17ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது சடலம் மார்ச் 21ஆம் திகதி தனக்கிளப்பு காட்டுப் பகுதியில் மீட்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரது மகள் மற்றும் மருமகன் ஆகியோர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர்களான மகள் மற்றும் மருமகனுக்கு எதிராக பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தனித்தனியாக வாசித்துக் காட்டப்பட்டன.

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தமை, கொலை செய்தமை மற்றும் நகைகளைக் கொள்ளையடித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, சுருக்க முறையற்ற விசாரணைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்ததுடன், இருவரையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!