கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை கைது!

#SriLanka #ARREST #Police #Airport #LANKA4 #foreign #Katunayaka
Abi
1 hour ago
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 1 கிலோகிராம் 236 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் 64 வயதுடைய தென்கொரியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவினரால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று நண்பகல் விமான நிலையத்தின் பயணப் பொதிகள் கையாளும் பகுதியில் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகள் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, கொக்கெய்ன் போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்தமை, நாட்டிற்குள் கடத்தி வந்தமை மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குறித்த தென்கொரியப் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!