59.65 மில்லியன் ரூபாய் நிதிமோசடி - தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய இளைஞர் கைது!

#SriLanka #ARREST #Crime #LANKA4 #Fraud
Thamilini
6 hours ago
59.65 மில்லியன் ரூபாய் நிதிமோசடி - தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய இளைஞர் கைது!

தனியார் நிறுவனம் ஒன்றில் 59.65 மில்லியன் ரூபாய் மதிப்பிலான நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நபர் ஒருவரை நேற்று கைது செய்துள்ளனர். 

 30 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த சந்தேகநபர், அந்நிறுவனத்தின் கணினிமயமாக்கப்பட்ட தரவு அமைப்பில் போலியான தகவல்களைப் பதிவேற்றி, 59,656,496.84 ரூபாய் தொகையை மோசடியாக வேறு கணக்குகளுக்கு மாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நம்பிக்கை துரோகம், மோசடி மற்றும் நிதியைத் தவறான முறையில் கையாண்டதாக குற்றப்புலனாய்வு துறையில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இதன் அடிப்படையில் மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த 30 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!