திரைப்படம் மற்றும் நாடகங்களில் நடித்த மூத்த நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்

#Death #Actress #TamilCinema #LANKA4 #Movie #condolence #L4
Prasu
5 hours ago
திரைப்படம் மற்றும் நாடகங்களில் நடித்த மூத்த நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்

திரைப்படம், நாடகம் மற்றும் சின்னத்திரை என பல்வேறு துறைகளில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த நடிகை வத்சலா ராஜகோபால் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.

திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்த வத்சலா, பள்ளிப் பருவத்திலேயே நடனம் மற்றும் நாடகத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். 

1953ம் ஆண்டு திருமணத்திற்குப் பிறகு சென்னைக்குக் குடிபெயர்ந்த அவர், தலைமை கணக்குத் தணிக்கையாளர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றினார்.

அப்போது அதே அலுவலகத்தில் இயக்குநர் ஆவதற்கு முன் மூத்த அதிகாரியாகப் பணியாற்றி வந்த கே.பாலசந்தருடன் இவருக்கு அறிமுகம் கிடைத்தது. 

அதன்பின்னர் 'ஜென்டில்மேன்', 'சதி லீலாவதி' , 'அன்னியன்', 'மொழி', 'ரிதம்', 'வின்னர்', 'பட்டியல்', 'தாம் தூம்', 'கல்யாண சமையல் சாதம்' உட்பட 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். 

பெரும்பாலும் பாசமிக்க, நகைச்சுவை உணர்வுமிக்க பாட்டி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

நாடகம், சின்னத்திரை, வெள்ளித்திரை என மூன்று தளங்களிலும் பல தலைமுறை ரசிகர்களைக் கவர்ந்த 93 வயதான வத்சலா ராஜகோபாலின் மறைவுக்குத் தமிழ் திரையுலகினரும், ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!