கிளிநொச்சி வைத்தியசாலையின் செயற்கைக் கருத்தரித்தல் ஆய்வகத்தின் தரத்தை மேம்படுத்த சர்வதேச நிபுணர் பயிற்சி!

#SriLanka #Hospital #Treatment #International #LANKA4
Abi
4 hours ago
கிளிநொச்சி வைத்தியசாலையின் செயற்கைக் கருத்தரித்தல்  ஆய்வகத்தின் தரத்தை மேம்படுத்த சர்வதேச நிபுணர் பயிற்சி!

வெற்றிகரமான IVF சிகிச்சை முடிவுகளைப் பெற்றுக்கொள்வதற்கு ஆய்வகங்களின் தரக் கட்டுப்பாடு மற்றும் சேவைகளின் தரத்தை உறுதிப்படுத்துவது மிகவும் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, IVF ஆய்வகங்களில் உள்தரக் கட்டுப்பாடு (Internal Quality Control) மற்றும் வெளித்தரக் கட்டுப்பாடு (External Quality Control) ஆகிய நடைமுறைகள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், அவற்றின் அறிக்கைகள் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோருக்குத் தெளிவாகப் பகிரப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த உதவி இனப்பெருக்கத் துறையின் கருவியல் மற்றும் ஆண் இனப்பெருக்கவியல் நிபுணரும் ஆய்வாளருமான டாக்டர் R. S. ஜெயந்திரன், கிளிநொச்சி வைத்தியசாலையின் IVF சேவைகளுக்கு விஜயம் செய்துள்ளார்.

இதன்போது, IVF ஆய்வகத்தின் தரக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் தொடர்பான பயிற்சிகளை வழங்கியதுடன், வெளித்தரக் கட்டுப்பாட்டு மதிப்பீட்டையும் மேற்கொண்டுள்ளார்.

மேலும், குறித்த நிபுணர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துடன் இணைந்து ஆராய்ச்சி மற்றும் ஆற்றல் மேம்பாட்டுப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

IVF சிகிச்சையைப் பெறத் திட்டமிடும் தம்பதியினர், சிகிச்சை நிலையங்களைத் தெரிவுசெய்யும்போது அவற்றின் ஆய்வகத் தரக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!