'டிட்வா' புயலால் சேதமடைந்த கொலன்னாவை மதஸ்தலங்களைப் புனரமைக்க நிதி ஒதுக்கீடு!

#SriLanka #Temple #LANKA4 #Divisional Secretariat
Abi
4 hours ago
'டிட்வா' புயலால் சேதமடைந்த கொலன்னாவை மதஸ்தலங்களைப் புனரமைக்க நிதி ஒதுக்கீடு!

'டிட்வா' புயலால் சேதமடைந்த கொலன்னாவை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மத வழிபாட்டுத் தலங்களைப் புனரமைப்பதற்கான ஆரம்பகட்ட நிதி இன்று (30) வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 15 விகாரைகள் மற்றும் இரண்டு தசசீல மாதா ஆசிரமங்களின் புனரமைப்புப் பணிகளை ஆரம்பிப்பதற்காக, மதிப்பிடப்பட்ட மொத்த செலவில் 20 சதவீதத்தை முற்பணமாக வழங்குவதற்கான காசோலைகள் கையளிக்கப்பட்டுள்ளன.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் சுனில் செனவி தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. 'டிட்வா' புயலினால் கொலன்னாவை பிரதேச செயலகப் பிரிவில் 27 விகாரைகள் சேதமடைந்துள்ளதாகவும், சேத மதிப்பீடுகள் நிறைவடைந்த பின்னர் அவை அனைத்தையும் புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புனரமைப்புத் திட்டம் பௌத்த மதஸ்தலங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை. அனர்த்தத்தினால் சேதமடைந்த இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மத வழிபாட்டுத் தலங்களையும் புனரமைப்பதற்கு நிதி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கொலன்னாவை பிரதேசத்திலுள்ள அனைத்து மத சமூகங்களினதும் வழிபாட்டுத் தலங்களை மீளக் கட்டியெழுப்புவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!