யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு: மேலதிக விசாரணை ஆரம்பம்!

#SriLanka #LANKA4 #money #Case #Court #inquiry #YoshithaRajapaksa
Abi
2 hours ago
யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு: மேலதிக  விசாரணை ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவுக்கு எதிராகப் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளன.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதீஷ் ரணதுங்க முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

அரச தரப்பு சார்பில் பிரதி மன்றாடியார் நாயகம் ஜனக பண்டாரவின் வழிநடத்தலில் சாட்சிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தெஹிவளை மற்றும் இரத்மலானை பகுதிகளில் 73 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐந்து காணித்துண்டுகளைக் கொள்வனவு செய்ததன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்ததாகக் குற்றஞ்சாட்டியே சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!