பொலிஸ் பாதுகாப்பில் சந்தேகநபர் உயிரிழப்பு: மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தம்!

#SriLanka #Death #Police #LANKA4 #suspend #officer
Abi
4 hours ago
பொலிஸ் பாதுகாப்பில் சந்தேகநபர் உயிரிழப்பு: மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தம்!

நிகவரெட்டிய மருத்துவமனையில் காவல்துறை பாதுகாப்பில் இருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கொபேகனே பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் சார்ஜென்ட்களும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 27ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் கடமை தவறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்பட்ட குறித்த நபர், கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டு கொபேகனே பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இரண்டு நாட்கள் பொலிஸ் பாதுகாப்பில் இருந்த அவர், பலத்த காயங்களுடன் நிகவரெட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சந்தேகநபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்னர் எவ்வித காயங்களும் இன்றி இருந்ததாகவும், அவரை மரத்தில் கட்டி வைத்திருந்த ஒரு மணி நேரத்திற்குள் பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!