16.5 இலட்சம் அடையாள அட்டைகள், சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்படாமல் தேக்கம்!

#SriLanka #LANKA4 #National Identity Card #driver's licenses
Abi
4 hours ago
16.5 இலட்சம் அடையாள அட்டைகள், சாரதி அனுமதிப்பத்திரங்கள்  அச்சிடப்படாமல் தேக்கம்!

நாட்டில் பிளாஸ்டிக் கார்டுகள் மற்றும் அச்சு இயந்திரங்களுக்கான தட்டுப்பாடு காரணமாக, சுமார் 10 இலட்சம் தேசிய அடையாள அட்டைகளும், 6.5 இலட்சத்திற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்களும் அச்சிடப்படாமல் தேங்கியுள்ளன.

இதன் காரணமாக, சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு விண்ணப்பிப்போருக்கு தற்போது தற்காலிக அனுமதிப்பத்திரங்களே வழங்கப்பட்டு வருகின்றன.

எனினும், நவம்பர் மாத நடுப்பகுதியில் புதிய அச்சு இயந்திரங்கள் கிடைக்கவுள்ளதாகவும், இதன் மூலம் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் திறனை இருமடங்காக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் துஷார பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அச்சிடும் பணிகளை முழுமையாக வழமைக்குக் கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!