சுவிற்சர்லாந்தில் C விசா உள்ள ஒருவர் எத்தனை வருடங்கள் வெளிநாட்டில் தங்கலாம்?

#SWITZERLAND #Tourist #government #LANKA4 #Visa #citizen #L4
Prasu
12 hours ago
சுவிற்சர்லாந்தில் C விசா உள்ள ஒருவர் எத்தனை வருடங்கள் வெளிநாட்டில் தங்கலாம்?

சுவிஸ் நாட்டில் C விசா (C Bewilligung) உள்ள ஒருவர் எத்தனை வருடங்கள் வெளிநாட்டில் தங்கலாம்?

 1. சாதாரணமாக 6 மாதங்கள்

  • C விசா உள்ள ஒருவர் சுவிட்சர்லாந்திற்கு வெளியே தொடர்ச்சியாக 6 மாதங்கள் தங்கலாம். 
  • 6 மாதங்களுக்கு மேல் வெளிநாட்டில் தங்கினால் C விசா செல்லுபடியை இழக்கலாம். 

2. அனுமதி பெற்றால் 4 வருடங்கள்!

வெளிநாட்டில் நீண்டகாலம் தங்க விரும்புபவர்கள் Aufrechterhaltung der Niederlassungsbewilligung என்ற அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அதிகபட்சமாக 4 வருடங்கள் C விசாவைப் பாதுகாக்க முடியும்.

3. முக்கிய நிபந்தனைகள் 

  • 6 மாதங்கள் முடிவதற்கு முன்னர் Migrationsamt அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
  • வெளிநாட்டில் தங்குவதற்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும். 
  • மீண்டும் சுவிட்சர்லாந்திற்குத் திரும்பும் நோக்கம் இருக்க வேண்டும். 
  • அனுமதி வழங்குவது அதிகாரிகளின் முடிவைப் பொறுத்தது.

வெளிநாட்டிற்கு நிரந்தரமாகக் குடிபெயர்ந்துவிட்டு, இடையில் சில நாட்கள் சுவிட்சர்லாந்திற்கு வருவது மட்டும் 6 மாதக் கணக்கை மீண்டும் தொடங்காது. 

முக்கியமான கேள்வி?

C விசா உள்ள ஒருவர் இலங்கையில் 4 வருடங்கள் தங்கிவிட்டு மீண்டும் சுவிட்சர்லாந்திற்கு வர முடியுமா?

  • ஆம், ஆனால் அதற்கு முன்கூட்டியே உரிய அனுமதி பெற வேண்டும். அனுமதி தானாகக் கிடைக்காது. 
  • சட்டம்: Art. 61 Abs. 2 AIG. 
  • ஆதாரம்: சுவிஸ் குடிவரவு சட்டம் மற்றும் Zürich Migrationsamt.
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!