சொகுசு பேருந்து சாரதி, நடத்துனர் மீது தாக்குதல் – 6 பேர் கைது!
#SriLanka
#Colombo
#ARREST
#Police
#Attack
#Bus
#LANKA4
#Bike
#Driver
#kalutara
Abi
3 hours ago
களுத்துறை – கொழும்பு பிரதான வீதியின் நாகஸ் சந்தி பகுதியில் சொகுசு பேருந்து ஒன்றை மோட்டார் சைக்கிள்களில் சென்று வழிமறித்து, அதன் சாரதி மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை வடக்கு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வாதுவை மற்றும் மொரந்துடுவை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.