செயற்கை நுண்ணறிவின் நன்மைகள் அனைவரையும் சென்றடைய வேண்டும் – சம வாய்ப்புகளுக்கு வலியுறுத்தல்!

#SriLanka #PrimeMinister #LANKA4 #education #artificial #Harini Amarasooriya
Abi
2 hours ago
செயற்கை நுண்ணறிவின் நன்மைகள் அனைவரையும் சென்றடைய வேண்டும் – சம வாய்ப்புகளுக்கு வலியுறுத்தல்!

கல்வியின் தரத்தை மேம்படுத்துதல், ஆராய்ச்சிகளை வலுப்படுத்துதல், அரச சேவைகளை வினைத்திறனுடன் முன்னெடுத்தல் மற்றும் புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல துறைகளில் செயற்கை நுண்ணறிவு முக்கிய பங்களிப்பை வழங்கும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, செயற்கை நுண்ணறிவினால் ஏற்படக்கூடிய சவால்கள் மற்றும் ஆபத்துகள் குறித்தும் கவனம் செலுத்தி, மக்களின் நலனை முன்னிறுத்தும் புத்தாக்கங்களையும் தேசிய முன்னுரிமைகளுக்கு ஏற்ப ஆராய்ச்சிகளையும் முன்னெடுக்க வேண்டியதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

‘செயற்கை நுண்ணறிவு, நிலைபேறான தன்மை மற்றும் புத்தாக்கம் ஊடாக அனைவருக்கும் சம வாய்ப்புகளைக் கொண்ட எதிர்காலத்தை நோக்கி’ எனும் கருப்பொருளில், ஒக்டோபர் 28ஆம் திகதி கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் இந்தக் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

மேலும், புதிய தொழில்நுட்பங்களால் கிடைக்கும் நன்மைகள் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் வகையில் சமமான வாய்ப்புகளை உறுதிப்படுத்துவது அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!