புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் - ஜனாதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு!

#SriLanka #LANKA4 #President #AnuraKumaraDissanayake #Migrant #Workers
Thamilini
1 hour ago
புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் - ஜனாதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு!

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் அந்நியச் செலாவணி ஈட்டுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு வழங்கும் முக்கிய பங்களிப்பை அங்கீகரித்துள்ள ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து அரசாங்க உதவிகளும் எவ்வித தாமதமோ அல்லது தடங்கலோ இன்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் குறித்த துல்லியமான மற்றும் புதுப்பிக்கப்பட்ட தரவுத்தளத்தைப் பேண வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். 

இத்தகைய நம்பகமான தகவல்கள், நலன்புரித் திட்டங்களை மிகவும் முறையாகவும் திறமையாகவும் நடைமுறைப்படுத்த அதிகாரிகளுக்கு உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்தக் கலந்துரையாடலில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழிலாளர் துறை அமைச்சர் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகே, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருனி ரணராஜா, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க மற்றும் ஏனைய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!