தனுஷ் வரவால் தவெகவுக்கு நடுக்கமா? அமைச்சர் சேகர்பாபுவின் அதிரடி விமர்சனம்!

#India #Cinema #Minister #LANKA4
Abi
1 hour ago
தனுஷ் வரவால் தவெகவுக்கு நடுக்கமா? அமைச்சர் சேகர்பாபுவின் அதிரடி விமர்சனம்!

தமிழக அரசியலில் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் மாறி மாறி ஆட்சியில் இருந்து வந்த நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தற்போது ஆட்சிக்கு வந்துள்ளது.

இந்த அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், நடிகர் தனுஷ் அரசியலில் நுழையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில், தனுஷின் அரசியல் பிரவேசம் தொடர்பாக தவெக தரப்பில் வெளியிடப்படும் கருத்துகளை முன்வைத்து, திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். நடிகர்கள் அரசியலுக்கு பிரவேசிப்பது ஜனநாயகத்தில் அவரவர் விருப்பம் எனத் தெரிவித்த சேகர்பாபு, விஜய் அரசியலுக்கு நுழைந்தபோது தாங்கள் அவரையோ த.வெ.கழகத்தையோ விமர்சிக்கவில்லை எனக் குறிப்பிட்டார். 

தனுஷ் அரசியலுக்கு பிரவேசிப்பதாக வெளியாகும் தகவல்கள் தொடர்பில் தவெக கருத்துத் தெரிவிப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், “எந்த நடிகர் அரசியலுக்குள் நுழைந்தாலும் எங்களை வெற்றிகொள்ள முடியாது எனத் தவெக உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

தனுஷின் அரசியல் பிரவேசம் குறித்து அவர்கள் பேசத் தொடங்கியிருப்பது அவர்களுக்குப் பயம் வந்துவிட்டதைக் காட்டுகிறது” என அவர் விமர்சித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!