அமெரிக்காவில் நடைபெறவுள்ள முதல் பிபா மகளிர் கிளப் உலகக் கோப்பை

#Women #America #LANKA4 #WorldCup #football #FIFA #L4
Prasu
1 hour ago
அமெரிக்காவில் நடைபெறவுள்ள முதல் பிபா மகளிர் கிளப் உலகக் கோப்பை

2028ம் ஆண்டு ஜனவரி 5 முதல் 30 வரை அமெரிக்காவில் முதல் பிஃபா மகளிர் கிளப் உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. 

இதில் ஆறு கண்டங்களின் கூட்டமைப்புகளைச் சேர்ந்த 19 அணிகள் பங்கேற்கவுள்ளதாக பிஃபா அறிவித்துள்ளது.

முக்கியமான விளையாட்டுத் தொடர்களை நடத்திய அனுபவம், சிறந்த விளையாட்டு உள்கட்டமைப்பு மற்றும் மகளிர் கால்பந்து மீதான மிகுந்த ஆர்வம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே அமெரிக்கா தேர்ந்தெடுக்கப்பட்டதாக பிஃபா தெரிவித்துள்ளது.

இது குறித்து பிஃபாவின் மகளிர் கால்பந்து பிரிவுத் தலைவர் சாராய் பேரிமேன், "அமெரிக்கா சமீபகாலமாக உயர்மட்ட பிஃபா தொடர்களை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறது. 

அங்கு மகளிர் கால்பந்து மீதான ஆர்வம் மற்றும் உயர்தர விளையாட்டு உள்கட்டமைப்பு ஆகியவை அந்த நாட்டை மிகச் சிறந்த தேர்வாக மாற்றியுள்ளன" என்று தெரிவித்தார்.

இந்தத் தொடருக்குத் தகுதி பெற்றுள்ள முதல் ஏழு கிளப் அணிகளையும் பிஃபா உறுதிப்படுத்தியுள்ளது: ஆர்சனல் (இங்கிலாந்து), பார்சிலோனா (ஸ்பெயின்), கிளப் அமெரிக்கா (மெக்சிகோ), கோதம் எஃப்சி (அமெரிக்கா), நேகோஹியாங் (வட கொரியா), கொரிந்தியன்ஸ் (பிரேசில்) மற்றும் வுஹான் ஜியாங்டா (சீனா). மீதமுள்ள 12 இடங்கள் கண்ட அளவிலான போட்டிகள் மூலம் தீர்மானிக்கப்படும்.

இதில் 2024 முதல் 2027ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அந்தந்த கண்டங்களில் சாம்பியன் பட்டம் வென்ற அணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இதன்படி, ஐரோப்பாவிலிருந்து ஆறு அணிகளும்; ஆசியா, ஆப்பிரிக்கா, வட மற்றும் மத்திய அமெரிக்கா (கரீபியன் பிராந்தியத்துடன் சேர்த்து), மற்றும் தென் அமெரிக்காவிலிருந்து தலா மூன்று அணிகளும் பங்கேற்கும். 

ஓசியானியாவிலிருந்து ஒரு அணி இடம்பெறும். சர்வதேச அளவில் மகளிர் கிளப் கால்பந்தாட்டத்தை விரிவுபடுத்தும் பிஃபாவின் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தத் தொடர் இனி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!