அக்டோபர் 28 முதல் சுவிட்சர்லாந்திற்கு நேரடி விமானச் சேவையை ஆரம்பிக்கும் பெங்களூரு
#India
#Flight
#SWITZERLAND
#LANKA4
#Bengaluru
#L4
Prasu
1 hour ago
ஸ்விஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் (KIA) மற்றும் சூரிச் இடையே வாரத்திற்கு ஐந்து முறை இடைநில்லா விமான சேவையை அக்டோபர் 28 முதல் தொடங்கவுள்ளது.
இதன் மூலம், சுவிட்சர்லாந்துடன் நேரடி விமான இணைப்பைக் கொண்ட தென்னிந்தியாவின் முதல் நகரமாக பெங்களூரு மாறும்.
இந்த சேவை இரு நகரங்களுக்கும் இடையே சுற்றுலாவை மேம்படுத்தவும், தொழில்நுட்பத் துறை உறவுகளை வலுப்படுத்தவும் உதவும்.
சூரிச்சிலிருந்து புறப்படும் முதல் விமானம் அக்டோபர் 28 அன்று அதிகாலை KIAவில் தரையிறங்கும்.
தற்போது, டெல்லி மற்றும் மும்பை ஆகிய இந்திய நகரங்கள் மட்டுமே சுவிட்சர்லாந்திற்கு நேரடி விமான சேவைகளைக் கொண்டுள்ளன குறிப்பிடத்தக்கது.