கனடாவிலிருந்து ஆல்பர்ட்டா மாகாணம் பிரியுமா? - வாக்கெடுப்பு முடிவுகள் அறிவிப்பு
கனடாவிலிருந்து ஆல்பர்ட்டா மாகாணம் பிரிவது தொடர்பான வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்நிலையில், வாக்கெடுப்பு முடிவுகள் வெளியானவண்ணம் உள்ளன.
கனேடிய மாகாணங்களில் ஒன்றான ஆல்பர்ட்டா மாகாணம், இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு மாகாணமாகும்.
ஆனால், கனடாவுக்கு தாங்கள் தங்கள் வளம் மூலம் பெரிய அளவில் பங்களிப்பைச் செய்தும், பதிலுக்கு பெடரல் அரசு தங்களை சரியாக கவனிப்பதில்லை, தங்கள் கருத்துக்கள் நாடாளுமன்றத்தில் எடுபடவில்லை என்னும் கருத்து ஆல்பர்ட்டா மக்களிடையே நிலவிவருகிறது.
ஆகவே, இதனை சரி செய்வதற்காக கனடாவிலிருந்து ஆல்பர்ட்டா மாகாணம் பிரிவது தொடர்பாக வாக்கெடுப்பு நடைபெற்றது.
இந்நிலையில், கனடாவின் ஒரு பகுதியாகவே ஆல்பர்ட்டா மாகாணம் நீடிக்க வேண்டும் என அந்நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர்.
ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், சுமார் 76 சதவீதம் பேர் கனடாவுடன் நீடிப்பதற்கு ஆதரவளித்துள்ளனர்.
அதேசமயம், 23 சதவீதம் பேர் பிரிவினைக்கு வழிவகுக்கக்கூடிய ஒரு செயல்முறையைத் தொடங்குவதற்கு ஆதரவளித்துள்ளனர் என வெளியான ஆரம்பகட்ட முடிவுகள் காட்டின.