முத்தரப்பு தொடர் - பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வி

#SriLanka #Pakistan #LANKA4 #Cricket #ENGLAND #ODI #L4
Prasu
3 hours ago
முத்தரப்பு தொடர் - பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வி

இங்கிலாந்து, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமானது.

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 49.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 305 ஓட்டங்களைப் பெற்றது.

பாகிஸ்தான் அணி சார்பில்,சல்மான் ஆஹா 107 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.

இந்நிலையில், 306 வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி 48.1 ஓவர்கள் நிறைவில் 268 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

இலங்கை அணி சார்பில் பவன் ரத்நாயக்க 79 ஓட்டங்களையும் ஜனித் லியனகே 60 ஓட்டங்களையும் கமிந்து மெண்டிஸ் 44 ஓட்டங்களையும் பெற்றனர். 

இறுதியில், பாகிஸ்தான் அணி 37 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!