வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிக்கு இடையிலான T20 தொடர் சமநிலையில் முடிவு
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடிய வருகிறது.
அந்தவகையில், இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஐந்தாவது T20 போட்டி பெங்களுருவில் நடைபெற்றது.
இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
மழை காரணமாக போட்டி ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டு போட்டி 9 ஓவர்களுக்கு குறைக்கப்பட்டது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி 7.4 ஓவர்களுக்கு 5 விக்கெட்களை இழந்து 118 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் மழை மீண்டும் குறுக்கிட்டது.
இதனை தொடர்ந்து மழை விடாது பெய்து வந்ததால் நடுவார்களால் போட்டி கைவிடப்பட்டது.
இப்போட்டியில் இந்திய அணி சார்பில், இஷான் கிஷன் 30 ஓட்டங்களும் நமன் தீர் 24 ஓட்டங்களும் குவித்தனர்.
இந்நிலையில், ஐந்தாவது போட்டி மழையால் கைவிடப்பட்டதால் இரு அணிகளுக்கும் இடையிலான T20 தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.