பாதாள உலகத்தைச் சேர்ந்த லொகு பெட்டியின் சகோதரர் சுட்டுக்கொலை
#SriLanka
#Death
#Hospital
#LANKA4
#GunShoot
#L4
Prasu
12 hours ago
அஹுங்கல்ல, வெலிகண்டப் பகுதியில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் 'லோகு பெட்டி' (Loku Patty) என்பவரின் தம்பி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த அவர் பலபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் 9 மி.மீ. ரக கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தச் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் 35 வயதான லந்துவாஹந்தி சுகத் நுவான் குமார டி சில்வா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் பிரபல நபரான 'லோகு பட்டி'யின் தம்பி என்று காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து அஹுங்கல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.