யாழ். நகரில் தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு நினைவு அஞ்சலி

#SriLanka #Jaffna #LANKA4 #memorial #tribute #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
யாழ். நகரில் தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு நினைவு அஞ்சலி

யாழ்ப்பாணம்: தமிழறிஞரும் புகழ்பெற்ற பட்டிமன்றப் பேச்சாளருமான பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் நினைவு அஞ்சலி நிகழ்வு நாளை புதன்கிழமை (30.09.2026) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வு, மாலை 3 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

நிகழ்வுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் தி. வேல்நம்பி தலைமை தாங்கவுள்ளார். தமிழறிஞரும், தமிழகத்தின் புகழ்பெற்ற பட்டிமன்றப் பேச்சாளருமான சாலமன் பாப்பையா தனது 90ஆவது வயதில் இம்மாதம் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை தனது சொந்த ஊரான மதுரையில் காலமானார்.

தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பட்டிமன்றப் பேச்சுத் துறைகளில் தனித்துவமான பங்களிப்பை வழங்கிய சாலமன் பாப்பையாவின் மறைவு தமிழ் ஆர்வலர்கள் மற்றும் இலக்கிய உலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அவரது தமிழ் பணியையும் நினைவையும் போற்றும் வகையில் யாழ்ப்பாண மண்ணில் முதன்முறையாக நினைவு அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், தமிழ் அறிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!