03 கோடிக்கும் அதிக பெறுமதியான தங்க நகைகளுடன் பெண் ஒருவர் கைது

#SriLanka #ARREST #Airport #Gold #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
03 கோடிக்கும் அதிக பெறுமதியான தங்க நகைகளுடன் பெண் ஒருவர் கைது

இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட நகைகள் அடங்கிய பொதியுடன் , கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெண்ணொருவர்  நேற்று (28) கைது செய்யப்பட்டார்.

 அங்கொடை, ஹல்கஹதெனிய வீதியைச் சேர்ந்த 38 வயதுடைய வர்த்தகப் பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 அவர் நேற்று (28) காலை சுமார் 7.30க்கு துபாயிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான UL-226 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். 

 இதன்போது விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், அவர் எடுத்துச் சென்ற முதுகுப்பையில் 12 பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 916 கிராம் எடையுடைய தங்க வளையல்கள் மற்றும் கழுத்து மாலைகளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 பின்னர் நகைகளுடன் குறித்த பெண் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 இந்நிலையில், இன்று   (29) காலை குறித்த தங்க நகைகளை சுங்க அதிகாரிகள் மதிப்பீடு செய்ததுடன், பெறுமதி சுமார் 3 கோடியே 66 இலட்சத்து 28 ஆயிரத்து 937 ரூபாய் எனக் மதிப்பிடப்பட்டுள்ளது. 

இதனையடுத்து குறித்த தங்க நகைகள் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டதுடன், பெண்ணுக்கு ரூ.250,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!