ஞானசார தேரரின் வழக்கு விசாரணை குறுகிய காலத்திற்கு ஒத்திவைப்பு!

#SriLanka #Colombo #CourtOrder #Gnanasara Thero #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
ஞானசார தேரரின் வழக்கு விசாரணை குறுகிய காலத்திற்கு ஒத்திவைப்பு!

ஜனாதிபதி மன்னிப்பு ரத்து செய்யப்பட்ட வணக்கத்துக்குரிய கலகொட அத்த ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை நிறைவேற்ற உத்தரவு கோரி சட்டமா அதிபர் தாக்கல் செய்த மனு, இன்று (29) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த மனு, நீதிபதிகள் மாயாதுன்ன கொரயா மற்றும் லக்மாலி கரணநாயக்க ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வின் முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது கலகொட அத்த ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. 

ஞானசார தேரருக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெட்டெகொட, தனது கட்சிக்காரர் உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வில் இருப்பதாகவும், இந்த மனு மீதான தனது வாதத்தை ஆராய்ந்து முன்வைக்க அவருக்கு ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

இருப்பினும், இது ஒரு குற்றவியல் வழக்கு என அரச சட்டத்தரணி சஜித் பண்டார தெரிவித்தார்.

மேலும், பிரதிவாதி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால், பிடியாணை பிறப்பிக்குமாறு அரச சட்டத்தரணி நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். 

 இருப்பினும் ஞானசார தேரரின்  வழக்கறிஞரின் கோரிக்கையை செவிமெடுத்த நீதிபதிகள் இந்த வழக்கை குறுகிய காலத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!