‘கிரிஷ்’ வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது சந்தேகநபராக பெயரிடல்

#SriLanka #Namal Rajapaksha #LANKA4 #Case #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
‘கிரிஷ்’ வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது சந்தேகநபராக பெயரிடல்

‘கிரிஷ்’ கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் வழக்கில், இலங்கை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நான்காவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை பகுதியில் உள்ள Transworks Square காணியை Krrish Transworks நிறுவனத்துக்கு பெற்றுக்கொள்வதற்கும், அதற்கான அனுமதிகளை விரைவாகப் பெற்றுக்கொள்வதற்கும் ரூ.70 மில்லியன் லஞ்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. 

இந்த விவகாரம் தொடர்பில் நாமல் ராஜபக்ஷவிடம் சிறையில் வைத்து வாக்குமூலம் பதிவு செய்வதற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அனுமதி வழங்கியிருந்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!