காவத்த – நீலகாமம் தோட்டத்தில் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களுக்கு காணி வழங்க நடவடிக்கை

#SriLanka #LANKA4 #land #family #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
காவத்த – நீலகாமம் தோட்டத்தில் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களுக்கு காணி வழங்க நடவடிக்கை

காவத்த – நீலகாமம் தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாதகமான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பான அமைச்சு மட்ட கலந்துரையாடல் இன்று (28.09.2026) கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர்கள், காவத்த பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, பெருந்தோட்ட முகாமைத்துவ கண்காணிப்பு பிரிவு (PMMD) அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடலின் போது, சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களுக்கும் காணிகளை வழங்குவதற்கான உரிய நடவடிக்கைகளை PMMD ஊடாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் மற்றும் எதிர்கால பாதுகாப்பை கருத்திற்கொண்டு, அவர்களுக்கு தேவையான ஆதரவு நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!