ரூ.57 மில்லியன் நிதித்தூய்தாக்கல் வழக்கு நவம்பர் 3ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

#SriLanka #LANKA4 #money #Case #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #YoshithaRajapaksa #Money laundering
Abi
2 hours ago
ரூ.57 மில்லியன் நிதித்தூய்தாக்கல் வழக்கு நவம்பர் 3ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி பொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக நிதித்தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி முன்விளக்க மாநாட்டிற்காக அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு இன்று (28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, யோஷித ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலையானார். 

டெய்சி பொரஸ்ட் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத நிலையில், அவர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா மருத்துவ அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் சுமார் ரூ.57 மில்லியன் பணம் மூன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

வழக்கை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்றம், அடுத்த கட்ட நடவடிக்கைக்காக வழக்கை நவம்பர் 3ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!