கிளிநொச்சி பூநகரி கல்விக் கோட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கௌரவிப்பு
சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் அனுசரணையுடன், கிளிநொச்சி பூநகரி கல்விக் கோட்டத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கிளி/ஜெயபுரம் மகா வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் மனித உரிமைகள் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சாள்ஸ் உள்ளிட்ட பேரவையின் பல உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் கல்விச் சாதனைகளைப் பாராட்டி, அவர்களை மேலும் கல்வியில் முன்னேறுவதற்கு ஊக்குவிக்கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இவ்வாறான பாராட்டு மற்றும் ஊக்குவிப்பு நிகழ்வுகள் மாணவர்களின் தன்னம்பிக்கையை அதிகரித்து, அவர்களின் எதிர்கால கல்விப் பயணத்திற்கு மேலும் உற்சாகமளிக்கும்.
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அவர்களின் கல்விப் பயணம் சிறப்பாக அமையவும், எதிர்காலத்தில் பல்வேறு சாதனைகளைப் படைக்கவும் வாழ்த்துகின்றேன்.