மண்டூர் பிறிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பு..

#SriLanka #LANKA4 #Cricket #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
மண்டூர் பிறிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பு..

மண்டூர் அருள்மணி விளையாட்டுக் கழகத்தின் வீரர்களை உள்ளடக்கிய மண்டூர் பிறிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு, வீரர்களை வாழ்த்தியதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

இளைஞர்களின் விளையாட்டுத் திறமைகளை ஊக்குவிப்பதுடன், அவர்களிடையே அணிச்சேர்க்கை, ஒற்றுமை மற்றும் விளையாட்டுப் பண்பை வளர்ப்பதில் இவ்வாறான போட்டிகள் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன.

மண்டூர் பிரதேச இளைஞர்கள் தங்களது திறமைகளை வெளிக்கொணரக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பும் ஊக்குவிக்கப்பட வேண்டும். கிராம மட்டத்திலிருந்து திறமையான வீரர்களை உருவாக்குவதில் விளையாட்டுக் கழகங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும்.

இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ வி. மதிமேனன் அவர்களும் கலந்து கொண்டு போட்டியை சிறப்பித்தார். 

வீரர்கள், விளையாட்டுக் கழக நிர்வாகிகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை மகிழ்ச்சியளிக்கின்றது.

எமது இளைஞர்களின் திறமைகளை மேலும் வளர்த்து, அவர்களை சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்குவதற்கும், கிராம மட்டத்தில் விளையாட்டுத் துறையை மேலும் வளர்ச்சியடையச் செய்வதற்கும் இவ்வாறான போட்டிகள் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும்.

மண்டூர் பிறிமியர் லீக் போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும், ஏற்பாட்டாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!