பத்தேகமவில் துப்பாக்கிச்சூடு - இருவர் உயிரிழப்பு!! சந்தேகநபர் தப்பியோட்டம்!
#SriLanka
#Police
#Crime
#GunShoot
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
பத்தேகமவின் ஹல்பத்தோட்டப் பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரு பெண்கள் உட்பட மொத்தம் மூவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் உயிரிழந்துள்ள நிலையில், மற்றொரு பெண் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
மேலும் காரில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச்சம்பவம் குறித்து இரண்டு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.