கிரிஷ் ஒப்பந்தம் - நாமலிடம் வாக்குமூலம் பதிவு

#SriLanka #Parliament #Namal Rajapaksha #SLPP #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
கிரிஷ் ஒப்பந்தம் - நாமலிடம் வாக்குமூலம் பதிவு

முன்னாள் ‘கிரிஷ்’ (Krrish) நிறுவனத்தின் பணிப்பாளர் ஜானகி சிரிவர்தனவிடமிருந்து 70 மில்லியன் ரூபா லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், சிறையில் உள்ள SLPP நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷவிடம் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

 வாக்குமூலம் பதிவு செய்வது தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரண ஆணைக்குழுவினர் விடுத்த கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 கொழும்பு கோட்டைப் பகுதியில் உள்ள நகர்ப்புற அபிவிருத்தி அதிகார சபைக்கு (UDA) சொந்தமான காணி ஒன்றை ‘கிரிஷ் ட்ரான்ஸ்வொர்க்ஸ் கொழும்பு (பிரைவேட்) லிமிடெட்’ (Krrish Transworks Colombo (Pvt) Ltd.) நிறுவனத்திற்குப் பெற்றுக்கொள்வதற்கும், அதற்கான அனுமதிகளை விரைவுபடுத்துவதற்கும் உதவியதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷவுக்கு மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் 70 மில்லியன் ரூபா லஞ்சம் வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 இதனைத் தொடர்ந்து நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!