பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் மரணம்; 30 பேர் காயம்

#Death #Attack #Pakistan #LANKA4 #BombBlast #L4
Prasu
3 hours ago
பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் மரணம்; 30 பேர் காயம்

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள காவல் சோதனைச் சாவடி ஒன்றின் அருகே, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை தற்கொலைப்படைத் தாக்குதலாளி ஒருவர் வெடிக்கச் செய்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இந்த தாக்குதலில் 30 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை மற்றும் மீட்புப் படையினர் தெரிவித்தனர். 

இத்தாக்குதல் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் டெரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

காவல்துறையின் தகவலின்படி, கொல்லப்பட்டவர்களில் சுங்கம் மற்றும் கலால் துறையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளும் அடங்குவர்.

தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்களின் தன்மையைக் கண்டறிய, காவல்துறை வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் குழுக்களை சம்பவ இடத்திற்கு அனுப்பியது.

உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்; காயமடைந்தவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!