மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு செல்ல உள்ள முதலமைச்சர் விஜய்

#India #Tamil Nadu #Temple #LANKA4 #Vijay #ChiefMinister #madurai #L4
Prasu
2 hours ago
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு செல்ல உள்ள முதலமைச்சர் விஜய்

தமிழக முதலமைச்சர் விஜய், நாளை மறுநாள் மீனாட்சி அம்​மன் கோவிலுக்​குச் செல்ல திட்​ட​மிட்​டுள்​ள​தால் பாது​காப்பு ஏற்​பாடு​களை போலீ​சார் தீவிரப்​படுத்தி வரு​கின்​றனர்.

உலகப் புகழ்​பெற்ற மதுரை மீனாட்சி அம்​மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்​குப் பின்பு கடந்த 17ம் திகதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் பங்​கேற்று தரிசனம் செய்​தனர். இதனைத்தொடர்ந்து செப்​.18 முதல் அக்.2ம் தேதி வரை மண்டல பூஜைகள் நடந்து வரு​கின்​றன.

இந்​நிலை​யில், அரசு மருத்​து​வமனை​களில் பிறக்​கும் குழந்​தைகளுக்கான ‘தாய்​மாமன் தங்க மோதிரம் திட்​டம்’ தொடக்க விழா செப்​. 28ம் தேதி உசிலம்​பட்​டி​யில் நடை​பெறு​வ​தாக இருந்தது.

திடீரென இடம்மாற்​றப்​பட்​டு, மதுரை அரசு ராஜாஜி மருத்​து​வ​மனையில் அதே தேதி​திகதியில் நடை​பெறுகிறது.

இதன் காரண​மாக, மதுரைக்கு வருகை தரும் தமிழக முதலமைச்சர் விஜய், மீனாட்சி அம்​மன் கோவி​லிலும் தரிசனம் செய்ய திட்​ட​மிடப்​பட்​டுள்​ள​தாக அரசு வட்டாரத்தில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!