ஸ்பெயினில் 60 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்து பிரிட்டிஷ் மலையேற்ற வீரர் உயிரிழப்பு

#Death #LANKA4 #ENGLAND #Player #Mountain #Spain #L4
Prasu
2 hours ago
ஸ்பெயினில் 60 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்து பிரிட்டிஷ் மலையேற்ற வீரர் உயிரிழப்பு

வடக்கு ஸ்பெயினின் மிக உயர்ந்த மலைகளில் ஒன்றிலிருந்து சுமார் 60 மீட்டர் (200 அடி) உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில், 28 வயதான பிரிட்டிஷ் மலையேற்ற வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கான்டாப்ரியன் மலைத்தொடரில் உள்ள 'டோர்செர்ரெடோ' (Torrecerredo) மலையின் உச்சியிலிருந்து கீழே இறங்கிக்கொண்டிருந்தபோது, ​​அந்த நபர் ஒரு பள்ளத்தில் விழுந்ததாக ஸ்பானிஷ் சிவில் காவல்துறை தெரிவித்துள்ளது.

அவசர உதவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினரும் வான்வழி மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 

மலையேற்ற மீட்புக் குழுவினரால் அந்த நபரின் உடல் மீட்கப்பட்டது. "ஸ்பெயினில் பிரிட்டிஷ் குடிமகன் ஒருவர் உயிரிழந்ததாக வந்த தகவல்களைத் தொடர்ந்து", உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக இங்கிலாந்து வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!