காங்கோவில் விமான விபத்து - இரு மூத்த இராணுவ அதிகாரிகள் உள்பட 14 பேர் பலி

#SriLanka #Congo #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #PlaneCrash
Thamilini
1 hour ago
காங்கோவில் விமான விபத்து - இரு மூத்த இராணுவ அதிகாரிகள் உள்பட 14 பேர் பலி

காங்கோவில் நேற்று இடம்பெற்ற விமான விபத்தில் இரு மூத்த  ராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர்.

இதற்கமைய ராணுவ நீதிமன்றத் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் முடோம்போ கட்டலாய் டியெண்டே மற்றும் ஆயுதப் படைகளின் தணிக்கை ஜெனரலான லெப்டினன்ட் ஜெனரல் பாகுமி லிகுலியா ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்த அதிகாரிகளாவர். 

அந்த இரண்டு ஜெனரல் நிலை அதிகாரிகளைத் தவிர, தூதுக்குழுவின் பன்னிரண்டு உறுப்பினர்களும் விமானக் குழுவினரும் இந்த விபத்தில் உயிரிழந்தனர்," என்று காங்கோ ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் எஃபோமி எகெங்கே ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தென்மேற்குப் பகுதியான கிக்விட்டில் இருந்து தலைநகர் கின்ஷாசாவுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, ​​ இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

தொழில்நுட்ப கோளாறினால் விபத்து ஏறப்ட்டிருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!