ராஜபக்ச மனைவியை கைதுசெய்ய CID சிங்கப்பூருக்கு பறக்கிறதா?

#SriLanka #Singapore #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #FCID
Thamilini
2 hours ago
ராஜபக்ச மனைவியை கைதுசெய்ய CID சிங்கப்பூருக்கு பறக்கிறதா?

'சிறிலியா சவிய' (Siriliya Saviya) நிதியத்துடன் தொடர்புடைய கணக்கு ஒன்றின் ஊடாக இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் பரிவர்த்தனைகள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக,  காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகுமாறு முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

 இந்நிலையில் அவர் ஆஜராவத்தற்கு வேறு ஒரு திகதியை கோரியுள்ளார். 

அவர் தற்போது மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டில் இருப்பதால், இச்சமயத்தில் அப்பிரிவின் முன் ஆஜராக இயலாது என்பதை எழுத்துப்பூர்வமாக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குத் தெரிவித்தார்.

 மேலும், அவர் இலங்கை திரும்பியவுடன் உடனடியாக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன் ஆஜராவார் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!