03 உயர் நீதிபதிகளுக்கு பதவி பிரமாணம்
#SriLanka
#Judge
#HighCourt
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
உயர் நீதிமன்ற நீதிபதிகளாக அண்மையில் நியமிக்கப்பட்ட மூவர், நேற்று (25) தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
தலைமை நீதிபதியின் உத்தியோகபூர்வ அறையில் இந்தப் பதவிப் பிரமாண நிகழ்வு நடைபெற்றது.
உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட நீதிபதிகள் பி. சிவகுமார், ஆனந்தி கனகரத்தினம் மற்றும் லலித் கன்னங்கர ஆகியோர் தலைமை நீதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
இந்நிகழ்வில் நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பிரசன்ன டி அல்விஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.