ஐ.நா பொதுச் சபையின் 81 ஆவது கூட்டத்தொடர் - விஜித்த ஹேரத் உரை
ஐ.நா பொதுச் சபையின் 81 ஆவது கூட்டத்தொடர் நடபெறவுள்ளது.
இந்த கூட்டத்தொடரில் இலங்கை சார்பான குழுவிற்கு வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமை தாங்குகிறார்.
இவ்வாண்டின் ஐநா பொதுச் சபை கருப்பொருளாக 'நம்பிக்கையை மீட்டெடுத்தல், மாற்றங்களை நிர்வகித்தல்: அனைவருக்கும் பயனளிக்கும் ஐக்கிய நாடுகள் சபை' (Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All) என்பது காணப்படுகிறது.
குறித்த தலைப்பின் கீழ் வரும் 28 ஆம் திகதியன்று அமைச்சர் ஹேரத் உரையாற்றவுள்ளார்.
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
பொதுச் சபைக் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், ஐ.நா.வின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பல்வேறு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் ஆகியோருடன் அமைச்சர் சந்திப்புகளை நடத்தவுள்ளார்.