3 வயது குழந்தையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தகவல் தொழில்நுட்ப மாணவன்

#India #Tamil Nadu #ARREST #Student #Sexual Abuse #LANKA4 #baby #L4
Prasu
2 hours ago
3 வயது குழந்தையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தகவல் தொழில்நுட்ப மாணவன்

கடலூரில் 3 வயது பெண் குழந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தபட்ட குற்றச்சாட்டில் 17 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மழலையர் பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய 3 வயது பெண் குழந்தை அவரது வீட்டின் அருகே மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இதையடுத்து குழந்தையின் பெற்றோர் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதை உறுதி செய்தனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், குழந்தையை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய நபரை காவல்துறையினர் கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் எனக்கோரி மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தையின் வீட்டின் அருகில் வசிக்கும் 17 வயது ஐ.டி.ஐ. மாணவன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

அந்த மாணவனிடம் நடத்திய தீவிர விசாரணையில், அங்கன்வாடிக்கு சென்று திரும்பிய குழந்தையை தூக்கிச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டான். 

இதையடுத்து அந்த மாணவனை கைது செய்த போலீசார், தொடர்ந்து இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!