பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை ஆரம்பித்து வைத்த முதலமைச்சர் விஜய்
கல்வி வளர்ச்சிக்காக, தமிழகத்தில் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைப்பாட்டை தடுக்கவும் பள்ளி வருகையை அதிகரித்து இடைநிற்றல் இல்லாத தொடர்ச்சியான கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும் அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையில் படிக்கும் குழந்தைகளுக்காக கடந்த 2022ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார்.
த.வெ.க. ஆட்சி அமைந்தவுடன் இந்த உணவு திட்டத்தின் பெயர் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் என்று மாற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் இதன் மூலம் கூடுதலாக 15 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவி கள் பயனடைவார்கள் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.
இந்த நிலையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை முதலமைச்சர் விஜய், சென்னை திருவான்மியூர் காந்திகிராமத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று தொடங்கி வைத்தார்.
அப்போது பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சர் விஜய் சக்கரை பொங்கலை பரிமாறினார். தொடர்ந்து பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து முதலமைச்சர் விஜய் உணவு சாப்பிட்டுள்ளார்.