ஹூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்துங்கள் – ஈரானுக்கு ஜி7 வலியுறுத்தல்!

#world_news #LANKA4 #Iran #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Riya
2 hours ago
ஹூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்துங்கள் – ஈரானுக்கு ஜி7 வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும், அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஈரானின் இந்தச் செயற்பாடுகள் சர்வதேச வர்த்தகத்தைப் பாதிப்பதுடன், உலகளாவிய நிலையற்ற தன்மையை உருவாக்கும் அபாயகரமான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத் தொடருக்கு இணையாக நடைபெற்ற சந்திப்பின் பின்னர், பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையிலேயே இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

“யேமனிலும் சவூதி அரேபியாவுக்கு எதிராகவும் ஹூதிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஏற்றுக்கொள்ள முடியாத தொடர் தாக்குதல்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஹூதிகள் அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும், வர்த்தகக் கப்பல்கள் மீதான அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்துவதுடன், நல்லெண்ணத்துடன் அரசியல் நடவடிக்கைகளுக்குத் திரும்ப வேண்டும்” என்றும் அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!