யாழ்ப்பாண கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் புதிய பிரதிப் பணிப்பாளர் கடமையேற்பு!
#SriLanka
#Jaffna
#Director
#LANKA4
#Office
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
2 hours ago
யாழ்ப்பாண மாவட்ட கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் புதிய பிரதிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட திரு. காசிநாதன் சசிகரன் அவர்கள் இன்று (21.09.2026) காலை 08.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் முன்னிலையில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதன்போது, புதிய பிரதிப் பணிப்பாளர் தனது கடமைகளை பொறுப்பேற்று, யாழ்ப்பாண மாவட்ட கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் எதிர்கால செயற்பாடுகளில் தனது பணிகளை முன்னெடுக்கவுள்ளார்.
திரு. காசிநாதன் சசிகரன் அவர்கள் இதற்கு முன்னர் கிளிநொச்சி மாவட்ட கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.