கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் முன்னிலை

#SriLanka #CourtOrder #Wimal Weerawansa #HighCourt #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் முன்னிலை

கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, சற்று நேரத்திற்கு முன் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். 

வீரவன்ச சார்பில் ஆஜரான சட்டத்தரணி மஞ்சுல பத்திராஜ, தனது வாகனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே தனது கட்சிக்காரரால் குறித்த நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்று நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

அதற்கிணங்க, தனது கட்சிக்காரருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை (வாரண்டை) மீளப்பெறுமாறு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார். 

 எனினும், கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம, இது தொடர்பான கோரிக்கையை நாளை மனு ஒன்றின்  மூலம் சமர்ப்பிக்குமாறு பிரதிவாதி தரப்புக்கு உத்தரவிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!