வலுவடையும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தொடரும் மழையுடன் கூடிய வானிலை

#SriLanka #weather #Rain #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
வலுவடையும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தொடரும் மழையுடன் கூடிய வானிலை

வங்காள விரிகுடாவின் அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த சில நாட்களில் மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இத்தாழ்வுப் பகுதியால் இலங்கைக்கு நேரடி பாதிப்பு ஏதுமில்லை என்றாலும், அதை நோக்கிய காற்று வீச்சு காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழைக்கால சூழல் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அத்துடன  மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். 

 குறிப்பிட்ட சில இடங்களில் சுமார் 100 மி.மீ வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது. 

வடமத்திய மாகாணம் மற்றும் மன்னார் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். 

 மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, அம்பாந்தோட்டை, மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலமான காற்று வீசக்கூடும். 

 இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க, பொதுமக்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!