பசில் ராஜபக்ஷவை கண்டறிய இன்டர்போல் ‘நீல அறிவிப்பு’ – அமைச்சர் தகவல்

#SriLanka #Basil Rajapaksa #Minister #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA #Interpol
Riya
2 hours ago
பசில் ராஜபக்ஷவை கண்டறிய இன்டர்போல் ‘நீல அறிவிப்பு’ – அமைச்சர் தகவல்

தற்போது வெளிநாட்டில் வசித்து வரும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கண்டறிவதற்காக ‘இன்டர்போல் நீல அறிவிப்பு’ (Interpol Blue Notice) ஒன்றைப் பிறப்பிக்கக் கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

மாத்தறை, பிரவுன்ஸ்ஹில் பகுதியில் காணி ஒன்றை கொள்வனவு செய்தமை மற்றும் ஊவா மாகாண சபைத் தேர்தல் காலத்தில் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் 7.8 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்தி 12,000 டி-ஷர்ட்டுகளை விநியோகித்தமை தொடர்பான நிதி மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் குறித்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் உள்ள சந்தேகநபரைக் கண்டறிந்து, அவரை இலங்கைக்கு அழைத்து வந்து சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதே இந்த சர்வதேச நடவடிக்கையின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!