பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தாதியர் குடியிருப்பு வளாகத்திற்கு அடிக்கல்.

#SriLanka #Point-Pedro #Hospital #LANKA4 #Nurse #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தாதியர் குடியிருப்பு வளாகத்திற்கு அடிக்கல்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கான புதிய தாதியர் குடியிருப்பு வளாகத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை (19) சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதற்காக 212 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் போதிய தாதியர் குடியிருப்புகள் இல்லாததால் தாதியர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுவரும் சிரமங்களுக்கு தீர்வாக இந்தக் குடியிருப்பு வளாகம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

அரசாங்கத்தின் சுகாதார உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், வடமாகாண சபையின் நிதியுதவியுடன் இதன் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அடிக்கல் நாட்டும் நிகழ்வில் வடமாகாண ஆளுநர், பிராந்திய அரசியல் பிரதிநிதிகள், மாகாண உயர் அதிகாரிகள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்..

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!