ஊழல் எதிர்ப்பு சட்டத் திருத்தம் – IMF கவலை!
#SriLanka
#Law
#LANKA4
#IMF
#corruption
#Amendment
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
1 hour ago
2023ஆம் ஆண்டின் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்கள், சொத்து மற்றும் பொறுப்புகளை வெளிப்படுத்தும் நடைமுறையைப் பலவீனப்படுத்தக்கூடும் என உள்நாட்டு மற்றும் சர்வதேச சிவில் அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
சொத்துப் பிரகடனங்களில் சில தகவல்களை மறைப்பதற்கான அதிகாரம், அவற்றைப் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் அரசுப் பங்குடைமை நிறுவனங்களுக்கான புதிய வரம்புகள் தொடர்பிலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தத் திருத்தங்கள் குறித்து அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், சில முன்மொழிவுகள் தொடர்பில் IMF கவலை தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.