அஸ்வசும கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பு

#SriLanka #Bank #LANKA4 #Aswesuma #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
அஸ்வசும கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பு

செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வசும நலன்புரிக் கொடுப்பனவை இன்று (16) முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, முதலாம் கட்டத்தின் கீழ் தகுதி பெற்ற 9 இலட்சத்து 99 ஆயிரத்து 53 குடும்பங்களுக்கு 9.18 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இரண்டாம் கட்டத்தின் கீழ் தகுதி பெற்ற 2 இலட்சத்து 13 ஆயிரத்து 335 குடும்பங்களுக்கு 2.12 பில்லியன் ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்படும் அஸ்வசும கொடுப்பனவை நாளை (17) முதல் பயனாளிகள் தமது வங்கிக் கணக்குகள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!