நேரலையில் கோர விபத்து : அமெரிக்காவில் செய்தி நிறுவன உலங்கு வானூர்தி விழுந்து நொறுங்கி 3 பேர் உயிரிழப்பு!

#world_news #LANKA4 #Helicopter #news #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
2 hours ago
நேரலையில் கோர விபத்து : அமெரிக்காவில் செய்தி நிறுவன உலங்கு வானூர்தி விழுந்து நொறுங்கி 3 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் நகரில் பேருந்து விபத்து தொடர்பான செய்தியை நேரலையில் ஒளிபரப்பிக் கொண்டிருந்த NBC செய்தி நிறுவனத்தின் உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

பேருந்து விபத்து தொடர்பான காட்சிகளை நேரலையில் ஒளிபரப்பிக் கொண்டிருந்தபோது, உலங்கு வானூர்தி எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து வீதியில் விழுந்து நொறுங்கியதுடன் தீப்பிடித்து எரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் இதுவரை மூன்று உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

அவற்றில் ஒரு உடல் வீதியில் சென்ற பாதசாரி ஒருவருடையது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட ஏனைய இரு உடல்களும் உலங்கு வானூர்தியில் பயணித்தவர்களுடையதா என்பது தொடர்பில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், படுகாயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் தொடர்பில் காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!